ETV Bharat / business

பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் ஆதாரமின்றி எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?

வீடுகளில் தங்கம் வைத்திருந்தால் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும், வரி கட்ட வேண்டும் என்ற பல சட்ட விதிமுறைகள் உள்ள நிலையில் பெண் குழந்தைகள் உள்ள வீடுகளில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 8:01 PM IST

சென்னை: திருடர்களுக்குப் பயந்து வீடுகளில் தங்கம் வைத்திருக்கப் பயப்படும் காலத்திற்கு மத்தியில் சட்ட விதிமுறைகளுக்குப் பயந்தும் தங்கம் வாங்காமலும், ஆதாரம் இன்றி வீட்டில் வைத்திருக்காமலும் இருக்கும் நபர்கள் உண்டு. ஆனால் இந்தியச் சட்டத்தின் படி திருமணமான பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் ஆண்கள் உள்ளிட்ட அனைவரும் வீட்டில் குறிப்பிட்ட அளவு தங்கம் வைத்திருக்க அனுமதி உண்டு. அதிலும் குறிப்பாக அந்த நகைகள் வைத்திருப்பதற்கு எவ்வித ஆதாரமும் தேவை இல்லை என்பதே சட்டவிதி. அந்த வகையில் வீட்டில் யார், யார் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.

திருமணமான பெண்கள் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்: வீட்டில் உள்ள திருமணமான பெண்கள், 500 கிராம் அதாவது அரை கிலோ வரை தங்கம் வைத்திருக்கலாம். அது ஆபரணமாகவோ அல்லது நாணயங்களாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என இந்தியச் சட்டம் சொல்கிறது. மேலும் அந்த நகைகளுக்கு எந்தவித சான்றுகளும் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

பெண்குழந்தைகள் இருந்தால் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்: வீட்டில் திருமணத்திற்குப் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கென 250 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம். அது ஒரு பெண் குழந்தைக்கான அளவு. அதேபோல் இரண்டு அல்லது 3 மூன்று பெண் குழந்தைகள் இருந்தால் தலா 250 கிராம் வீதம் மூன்று பெண் குழந்தைகளுக்கும் சேர்த்து 750 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம்.

ஆண்கள் தங்கள் கை வசம் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்: வீட்டில் உள்ள ஆண்கள் திருமணமானவராக இருந்தாலும் சரி, திருமணமாகாதவராக இருந்தாலும் சரி அவர் கைவசம் 250 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம். இதற்கு எவ்வித சான்றுகளும் தேவை இல்லை எனச் சட்டம் சொல்கிறது.

இந்த சூழலில், இனி வருமான வரி சோதனைக்கு, வருமான வரி கட்டணத்திற்கோ என எதற்கும் அச்சப்படாமல் குறிப்பிட்ட அளவு நீங்கள் தங்கம் சேமித்து வைப்பதில் எவ்வித தடையும் இல்லை.

தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்: இது ஒரு பக்கம் இருக்கக் காலம் முழுவதும் நீங்கள் கஷ்டப்பட்டு சிறுக சிறுக சேர்க்கும் பணத்தைக் கொண்டு என்ன செய்யலாம்? அதை எப்படிச் சேமிக்கலாம்? எப்படி பன்மடங்காக உயர்த்தலாம் உள்ளிட்ட பல கேள்விகள் சாமானியர்களுக்கு வரும், இது தொடர்பாகப் பொருளாதார நிபுணர்கள் கருத்துப்படி கூற வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் முதலீட்டையும், சேமிப்பையும் தங்கத்தில் செய்யுங்கள் என்பதேயாகும். தங்கத்தில் நீங்கள் செய்யும் முதலீடு எந்த சூழலிலும் உங்களைத் தோல்வி அடையச்செய்யாது எனப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: வெற்றிலை பாக்குப் போடுவது நல்லதா? கெட்டதா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.