ETV Bharat / business

செங்கடலில் ஹௌதி அமைப்பினர் தாக்குதல்.. இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2023, 11:07 PM IST

Houthi attacks on ships passing through Red Sea: இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக செங்கடல் வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஹௌதி அமைப்பினரின் தாக்குதல் இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து ட்ரூரி கடல்சார் ஆராய்ச்சியின் மூத்த மேலாளர் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பிரத்யேக தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

செங்கடலில் ஹௌதி அமைப்பினர் தாக்குதல்
செங்கடலில் ஹௌதி அமைப்பினர் தாக்குதல்

டெல்லி: இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அவ்வப்போது செங்கடல் வழியாக ஏற்றுமதி மேற்கொள்ளும் கப்பல்களை குறிவைத்து ஏமனை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹௌதி அமைப்பினர், தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதல் இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆரம்பித்த போரில், இதுவரை சுமார் 22 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விகிதத்தில் பாலஸ்தீனிய பகுதியான காசா மக்களே அதிகமானோர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதல் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சரக்குகள் கொண்ட கப்பல்களை குறிவைத்து, ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஈரான் தொடர்புடைய ஹௌதி அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

முன்னதாக 10 நாடுகளைக் கொண்ட கடற்படைக் கூட்டணி மற்றும் செங்கடல் வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களைப் பாதுகாக்க, ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியன் தொடங்கப்படும் என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காசா மீது தொடரப்பட்ட போருக்கு பழி வாங்கும் செயலாக இஸ்ரேலுடன் நட்பு பாராட்டும் நாடுகளின் கப்பல்களை குறிவைத்து ஹௌதி அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய ஏற்றுமதி பாதைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது, செங்கடல். அந்த வகையில், சமீபத்தில் ஹௌதீஸ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜெட் எரிபொருளை ஏற்றிச் சென்ற டேங்கர் மீது தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, MV Chem Pluto லிபேரியாவின் கெமிக்கல் மற்றும் எண்ணெய் டேங்கரில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலின்போது, 21 இந்தியர்கள் மற்றும் ஒரு வியாட்நாம் நாட்டைச் சேர்ந்தோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் இந்தியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. முன்னதாக நவம்பர் மாதம் 25 இந்தியர்களைக் கொண்டு துருக்கியில் இருந்து தெற்கு செங்கடல் வழியாக இந்தியா புறப்பட்ட சரக்கு கப்பல் ஹௌதி அமைப்பினரால் கடத்தப்பட்டது.

இப்படியான தொடர் சம்பவங்கள் இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஹௌதி தாக்குதலினால் இந்தியப் பொருளாதாரத்தில் இரு கோணங்களில் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ட்ரூரி கடல்சார் ஆராய்ச்சியின் மூத்த மேலாளரான (துறைமுக மற்றும் கொள்கலன் ஆராய்ச்சி) சுப்ராதா கே பெக்ரா, ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, "செங்கடலில் ஹௌதி தாக்குதலினால் இந்திய ஏற்றுமதியாளர்கள் அவர்களின் சரக்குகளை ஏற்றுமதி செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும், செங்கடல் மூலம் ஏற்றுமதி நிலை பெற்றிருந்த நிலையில், cape of good hope வழியாக தற்போது 500 டாலர் முதல் 1000 டாலர் TEU மதிப்புமிக்க சரக்குகள் ஏற்றுமதி செய்யப்படுவதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பொருட்களின் விலையை அதிகரிக்க வழிவகுக்கும்.

மேலும், இது கொண்டு செல்லப்படும் பொருட்களின் காப்பீட்டுச் செலவையும் அதிகரிக்கும். பொதுவாக இந்திய வர்த்தகத்தில் அதிகளவில் இடம் பிடித்திருப்பது ஆடைகள், ஜவுளி மற்றும் மருந்துப் பொருட்களே. வியாபாரிகள் அவர்களின் பொருட்களுக்கு எம்முறையிலான வணிகத்தை பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து பெரும்பாலும் முடிவெடுப்பது, வியாபாரிகளே.

கடல் வணிகத்தை தவிர்த்து சில வியாபாரிகள், விமானம் மூலமான ஏற்றுமதியைத் தேர்ந்தெடுப்பர். விமானம் மூலமான ஏற்றுமதி என்பது சற்று விலை உயர்வைக் கொண்டது. அதிலும், தற்போது cape of good hope வழி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக, தற்போது அதன் செலவும் கணக்கிடப்படும்.

இந்த ஏற்றுமதிகள் இந்தியப் பொருளாதாரத்தில் நேரடி முகங்களைக் கொண்டுள்ளதால், இந்தச் சூழல் இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, தற்போது இந்திய வியாபாரிகள் இழப்பைச் சந்திக்க நேரிட்டால், ஏற்றுமதியினால் பெறப்படும் வருவாய் சரிவிற்கு வழிவகுக்கும்.

இது ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்தில் பெரும் இழப்பைச் சந்திக்க வழிவகுக்கும். குறிப்பாக ஆடைகள், ஜவுளி போன்ற தொழிற்சாலைகளில் இதன் தாக்கம் அதிகரித்து இருக்கும். இதனால் கடும் இழப்புகளைச் சந்திக்கும் தொழிற்சாலைகளில், உற்பத்திக் குறைவு, பணி நீக்கம் போன்றவைகளை முன்னெடுத்து வேலைவாய்ப்புகளின் நிலையை குளறுபடிக்கு வழிவகுக்கின்றன.

ஏற்றுமதியினால் பெறப்படும் வருவாய் என்பது ஒரு நாட்டின் அந்நியச் செலாவணி இருப்புக்கு முக்கிய பங்களிக்கிறது. ஏற்றுமதியில் ஏற்படும் சரிவினால், பொருட்களின் விலையில் இந்தியாவின் நிர்ணயத் தன்மையை பாதிப்பதுடன், நாணய மதிப்பிலும் தாக்கத்தை உண்டாக்குகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் மூலதனமாக விளங்குகின்றன.

ஏற்றுமதி சார்ந்த தொழில்களில் ஏற்படும் இழப்புகளால், தொழில் ரீதியான நம்பிக்கைக்கு வழிவகுக்கும். மேலும் முதலீடு மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார முடிவுகளைப் பாதிக்கும். ஏற்றுமதி வருவாய்களில் இழப்பு ஏற்படும் பட்சத்தில், அரசாங்கத்திற்கு குறைந்த வரி வருவாய், உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் பொது சேவைகளின் நிதித்திறனை முற்றிலும் பாதிக்கும்.

நாட்டின் பொருளாதாரத்தில் நேரடி முகங்களைக் கொண்ட ஏற்றுமதி துறையில் ஏற்படும் இழப்புகள், அந்த நிறுவனத்தைக் கடந்து நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. உதாரணத்திற்கு, ஏற்றுமதி துறை சார்ந்த போக்குவரத்து, தளவாடங்கள் போன்ற சேவைகளில் பின்னடைவு ஏற்படுத்துகிறது.

ஏற்றுமதியில் ஏற்படும் தொடர் சரிவுகள் உலகச் சந்தையில் இந்திய சரக்குகளுக்கான தரத்தையும், மதிப்பையும் கேள்விக்குறியாக்குகிறது. தொழில் சார்ந்த யுக்திகளிலும், புதிய அறிமுகங்கள் மற்றும் முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தாலும் ஏற்றுமாதியாளர்களுக்கான வரம்புகள் இல்லாததால் மேற்காசியா போன்ற பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நேபாள விமான விபத்துக்கு இதுதான் காரணம்..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.