ETV Bharat / business

கோதுமை விலையேற்றம் வட்டி உயர்வுக்கு வழிவகுக்குமா? - மீண்டும் அதிகரிக்கும் ரெப்போ

கோதுமை மற்றும் அதில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் சில்லறை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பணவீக்கத்தை கட்டுப்படுத்த மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதுபோன்ற காரணங்களால் வரும் காலங்களில் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பே இல்லை எனவும் கூறப்படுகிறது.

கோதுமை விலை உயர்வு
கோதுமை விலை உயர்வு
author img

By

Published : Mar 3, 2023, 10:27 PM IST

ஹைதராபாத்: நாட்டின் பிற மாநிலங்களை விட பஞ்சாப், ஹரியானாவில் கோதுமை அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. கோதுமையை ஏற்றுமதி செய்யும் உலகின் இரண்டாவது பெரிய நாடு இந்தியா ஆகும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே கோதுமை மற்றும் அதில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் சில்லறை விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் வருங்காலங்களில் அதீத வெப்பம் காரணமாக கோதுமை விளைச்சல் பாதிக்கப்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கோதுமை விலையேற்றம்: சில்லறை வர்த்தகத்தில் கோதுமை மற்றும் கோதுமை சார்ந்த பொருட்களின் விலை கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து உயரத் தொடங்கியது. 2020-ம் ஆண்டை விட விலை 1 சதவீதம் உயர்ந்தது. கோதுமை உற்பத்தியில் மிகப்பெரும் நாடான இந்தியாவில் அதன் விலை உயர்ந்தது, பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கடந்த ஆண்டு ஜூலையில் கோதுமை மற்றும் கோதுமைப் பொருட்களின் சில்லறை பணவீக்கம் 10.7% என்ற இரட்டை இலக்கத்தை எட்டியபோது நிலைமை மேலும் மோசமடைந்தது. இதையடுத்து நடப்பாண்டு ஜனவரியில் கோதுமை மற்றும் கோதுமை சார்ந்த பொருட்களின் சில்லறை பணவீக்கம் 20 சதவீதத்தை தாண்டியது.

விலை உயர்வும், வட்டி அதிகரிப்பும்: கோதுமை மற்றும் அது சார்ந்த பொருட்களின் சில்லறை பண வீக்கம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இரட்டை இலக்கத்தில் உள்ளது. இது வங்கிகள் விதிக்கும் ரெப்போ உள்ளிட்ட வட்டி விகிதங்களை உயர்த்த நேரடியாக வழிவகுக்கிறது. கோதுமை விலை உயர்வு பணவீக்கத்துக்கு காரணமாவதால், வேறு வழியின்றி வீட்டுக்கடன், தனி நபர் கடன், பிற கடன்களுக்கு வட்டி விகிதங்களை உயர்த்தும் நிலை ஏற்படுகிறது.

நுகர்வோர் குறியீட்டு எண்: கோதுமை மற்றும் கோதுமை தொடர்பான பொருட்களின் நுகர்வோர் குறியீட்டு எண் (CPI) 3.89 சதவீதமாக உள்ளது. எனினும், சில்லறை பண வீக்கத்தில் கோதுமையின் பங்களிப்பு 2022ல் 11.4%, 2023ம் ஆண்டு 11% ஆகவும் உள்ளது.

ரெப்போ விகிதம் உயர்வு: சில்லறை வர்த்தகத்தில் கோதுமை விலை தொடர்ந்து உயர்ந்ததால், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அதுவும், கடந்த 9 மாதங்களில் 6-வது முறையாக அண்மையில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் ரெப்போ விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக உயர்ந்தது.

மேலும் விலை உயரும்?: கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வரும் மாதங்களில் வெப்பநிலை மேலும் உயரும் என்பதால், கோதுமை, காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்படலாம். எனவே வரும் காலங்களில் வீட்டுக்கடன், வாகனக்கடன், தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

இதையும் படிங்க: மூளைக்காய்ச்சல் எப்படி உண்டாகிறது.. பாக்டீரியாக்கள் எவ்வாறு மூளை செல்களை பாதிக்கின்றன.. முழு விளக்கம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.