ETV Bharat / business

தீபாவளி கொண்டாட்டம்: புதுசா என்னென்ன ஆடைகள் வந்திருக்கு பார்க்கலாம்.! - ஆடைகளின் புதுவரவு

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் புதிய ஆடைகள் வாங்க தயாராகிக்கொண்டு இருக்கிறீர்களா? புதிய வரவாக என்னென்ன ஆடைகள் எனப் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 7:00 PM IST

சென்னை: தீபாவளி வந்தாலே கொண்டாட்டம்தான். வீட்டு வாசலில் கோலமிட்டு, பலவகையான பலகாரங்கள் செய்து, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடுவோம். இந்த கொண்டாட்டங்களை முழுமையாக்கப் புத்தாடை மிக முக்கியமான ஒன்று. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை நாளை களைக்கட்ட வைக்கும் வகையில் பல்வேறு ஆடை ரகங்கள், புதிய டிசைன்கள் மார்கெட்டில் அடியெடுத்து வைக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு என்னென்ன கலெக்ஷன் வந்திருக்கிறது எனப்பார்க்கலாம்.

போத்தீஸில் தீபாவளி ஃபேஷன் ராக்கெட் என்ற பெயரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு புதிய ஆடை கலெக்ஷன்கள் வந்திருக்கின்றன. பெண்களுக்கென பிரத்யேகமாக "Litchie sarees, Ombre Sarees, Twara Florals, Alia cuts எனக் கண்கவர் ஆடைகள் கொட்டிக்கிடக்கின்றன. அதேபோல குழந்தைகளுக்கு, "pop prince and pop princess" pothys - என்ற பெயரில் அழகழகான ஆடைகள் அணிவகுத்திருக்கின்றன.

இதையும் படிங்க: சொக்க வைக்கும் ஜூவல்லரி.. அமேசான், பிளிப்கார்டில் அதிரடி ஆஃபர் சேல்.!

தி சென்னை சில்க்ஸ் தீபாவளி கொண்டாட்டத்தின் விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள், நடிகர் சாந்தனு, குஷ்பு உள்ளிட்ட பிரபலங்கள் ஆடிப் பாடி கொண்டாடி தீபாவளி கலெக்ஷன் கோடி, மகிழ்ச்சியும் கோடி என முடியும் அந்த விளம்பர வரிகளுக்கு ஏற்றதுபோல் ஏராளமான கலெக்ஷன்கள் தங்களிடம் இருப்பதாக சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் கூறுகின்றனர்.

இதே போன்று தீபாவளியை எதிர்நோக்கி பல்வேறு நிறுவனங்களும் கோடிக்கணக்கில் முதலீடு செய்தும், விளம்பரங்களுக்கு செலவிட்டும் காத்திருக்கின்றன. ஆனால் இதிலிருந்து உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற தரமான ஆடைகளை தேர்வு செய்வது உங்களின் சாமர்த்தியத்தில் தான் உள்ளது.

பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல் குறைந்த விலையில் இருந்து லட்சங்கள் மதிப்பிலான ஆடைகள் தீபாவளி கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கச் சந்தைகளில் வந்திருக்கின்றன. அதேபோல, ஆன்லைனில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான விதவிதமான ஆடைகள் வந்திருக்கின்றன. அமேசான், பிளிப்கார்ட், மீஷோ உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது. ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்களுக்கான ஆடைகள், வெறும் ரூ.400 மற்றும் ரூ.500 -க்கே கிடைப்பதாக இந்நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன.

அதேபோல ஆர்எம்கேவி நிறுவனம் பட்டாடை விற்பனையில் புகழ்பெற்று விளங்குகிறது. இங்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய டிசைன்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. Peach Taj Luminous Handloom Natural Dyed Lino Varna Silk saree, Rustic Orange Enchanted Handloom Natural Dyed Lino Varna Silk Saree உள்ளிட்டவை புதுவரவாக உள்ள நிலையில் இவற்றின் விலை ரூ.38,950 ஆக உள்ளது. இதேபோல, குறைந்த விலையில் இருந்து லட்சங்கள் மதிப்புள்ள புடவைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையைப் புத்தாடைகள் அணிந்து சிறப்பாகக் கொண்டாடுங்கள். மகிழ்ச்சியோடு இருங்கள். விற்பனைக்காக விளம்பரங்கள் இருந்தாலும், உங்களின் தேவையையும் , பட்ஜெட்டையும் அளவிட்டு ஆடைகளை வாங்குங்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடுங்கள்.

இதையும் படிங்க:தீபாவளி பலகாரங்களால் ஆபத்து? உஷாரா இல்லைன்னா உடம்பு கெட்டுப்போயிடும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.