வங்கி கடன் அட்டை என்னும் கிரெடிட் கார்டு (Credit Card), ஒவ்வொரு வாடிக்கையாளரின் வருமான வரம்பினைப் பொறுத்து வழங்கப்படுகிறது. இவ்வாறு புதிதாக கிரெடிட் கார்டு வழங்கப்படும்போது, வருடாந்திர கட்டணம், மாத மற்றும் வருடாந்திர அறிக்கை கட்டணம், கார்டு தொலைந்தால் புதிய கார்டு வாங்குவதற்கான கட்டணம் என பல கட்டணங்களை வங்கிகள் வசூலிக்கின்றன.
எனவே பூஜ்ஜிய அக்கவுண்ட் அல்லது குறைவான தொகையுடன் கூடிய கிரெடிட் கார்டுகளைப் பெற்றால், இத்தகைய கட்டணங்களிலிருந்து விடுபடலாம். பொதுவாக புதிய கிரெடிட் கார்டுகளுக்கு 50 நாட்கள் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
இவ்வாறு வழங்கப்படும் கிரெடிட் கார்டுகளின் அதிகபட்ச வரம்பு, வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோர், பணப்பரிமாற்றங்கள், வருமானம் மற்றும் கடன் பயன்பாடு ஆகியவற்றைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது கிரெடிட் கார்டுகளைப் பெற்ற பிறகு, அதன் மூலம் செய்யப்படும் செலவுகளுக்கு சரியான கால நிர்ணயத்திற்குள் தொகையை செலுத்தும்போது, கிரெடிட் ஸ்கோர் மதிப்பு அதிகரிக்கும்.
அதேபோல் வாடிக்கையாளரின் அதிகபட்ச கடன் வரம்பும் அதிகரிக்கப்படும். ஆனால், முறையாக பணம் செலுத்தாமல் இருந்தால் வங்கியின் வட்டி விகிதம் அதிகமாகும். இதனால் கடன் சுமை அதிகரிக்கும். மேலும் கிரெடிட் கார்டு பில்லில் சரியான பணப்பரிமாற்றங்கள் இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும்.
தற்போது ஆன்லைன் வணிக நிறுவனங்களால் வழங்கப்படும் ரிவார்ட்ஸ், கேஷ்பேக் ஆகியவற்றிற்கு கிரெடிட் கார்டை பயன்படுத்த முடியும்.
இதையும் படிங்க: குறுகிய கால அல்லது நீண்ட கால நிலையான வைப்பு(FD): உங்களுக்கு எது சிறந்தது?