ETV Bharat / business

லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகளை தேர்வு செய்வது எப்படி? - லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகள்

லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுப்பவர்கள், தங்களது தேவைக்கு பொருத்தமான பாலிசியை தேர்ந்தெடுப்பது முக்கியம் என இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ விஷாகா தெரிவித்துள்ளார்.

Best
Best
author img

By

Published : Sep 13, 2022, 2:22 PM IST

ஹைதராபாத்: கரோனா காலத்திற்குப் பிறகு லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதற்கு காரணம், வாழ்க்கையின் நிச்சயமற்ற நிலைகளை சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டியுள்ளது. லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுக்க தயாராகும் முதியோர் உள்பட அனைவருக்கும், எந்த வகையான பாலிசிகளை எடுக்க வேண்டும்? என்ற கேள்வி எழும்.

பாலிசி எடுப்பதற்கு முன்பு, நமது தேவைகளை மதிப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உடல்நலப் பிரச்சினைகள் இல்லாத முதியோர், அதிக பிரீமியம் செலுத்தி பாலிசிகளை எடுக்கலாம் என்று கூறுகிறார்கள். முதியோர்கள் அனைவரும் பாலிசி எடுக்கலாம். ஓரு இன்சூரன்ஸ் பாலிசியை எப்போதும், முதலீட்டு திட்டத்துடன் ஒப்பிட முடியாது. எதிர்பாராமல் ஏதேனும் நடந்தால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்குகின்றன, முதலீட்டுத் திட்டங்களில் இத்தகைய பலன்கள் இருக்காது.

இதுதொடர்பாக பேசிய இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஆர்.எம்.விஷாகா, "பாலிசி என்பது பாலிசி எடுப்பவருக்கும் அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே உள்ள நம்பிக்கையின் ஒப்பந்தம். எனவே, பாலிசி எடுக்கும் நபர் தேவையான அனைத்து விவரங்களையும் வழங்க வேண்டும்.

உடல்நலம், நிதி நிலைமை மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றிய விவரங்கள் தெளிவாகப் பகிரப்பட வேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் சரியாக வழங்கப்பட்டால், இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்படாது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், க்ளெய்ம்களுக்கான பேமெண்ட்கள் வேகமாகவும், தொந்தரவு இல்லாததாகவும் இருக்கிறது.

தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் வெவ்வேறு நிதித் தேவைகள் உள்ளன, அவை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒருவருக்கு நல்ல பாலிசி என்று தோன்றுவது, இன்னொருவருக்கு சரியாக பொருந்தாமல் போகலாம். இதைக் கருத்தில் கொண்டு, உங்கள் நிதித் தேவை மற்றும் எதிர்கால நோக்கங்களின் அடிப்படையில் பாலிசிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சந்தேகம் இருந்தால், நிபுணர்களின் ஆலோசனையைப் பெறலாம். சரியான பாலிசிகளை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: ஜிப்லைன் நிறுவனத்தின் CFOஆக தீபக் அகூஜா நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.