சென்னை: இந்தியாவின் சிறப்பு வாய்ந்த பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாபெரும் ஆன்லைன் விற்பனைதாரர்களான அமேசான் (amazon) மற்றும் பிளிப்கார்ட் (flipkart) உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளன. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Great Indian Festival) விற்பனை மற்றும் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் (Big Billion Days) விற்பனை வரும் 8ஆம் தேதி நள்ளிரவு முதல் தொடங்கவுள்ளது.
ஆனால் ப்ரைம் யூசர்ஸ்-க்கு (prime users) மட்டும் வரும் 7ஆம் தேதி நள்ளிரவு முதல் அதாவது நாளை நள்ளிரவு முதலே தள்ளுபடி விற்பனை தொடங்குகிறது. அதேபோல, JioMart மற்றும் Tata Neu போன்ற ஆன்லைன் விற்பனைதாரர்களும் தங்கள் தள்ளுபடி விற்பனைகளை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
140 மில்லியனுக்கும் அதிகமான ஆன்லைன் வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் அவர்களை கவரும் விதமாக பல்வேறு தள்ளுபடி விற்பனைகளை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் அறிவித்துள்ள நிலையில், பண்டிகை கால விற்பனை 18 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை அதிகரித்து சுமார் 11 பில்லியன் டாலர்களை அள்ளி குவிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
பண்டிகைக்கால விற்பனையில் அமேசான், பிளிப்கார்ட்; பண்டிகை கால விற்பனை என்பது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களின் வருடாந்திர விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், அதேபோல, மீஷோ (Meesho), ஜியோ மார்ட் (JioMart) மற்றும் டாடா நியோ (Tata Neu) போன்ற அனைத்து நிறுவங்களுக்கும் பண்டிகை கால விற்பனையில் அதிக கவனம் செலுத்துகின்றன. இந்த பண்டிகை கால விறைபனையின்போது குறைந்த தள்ளுபடியில் அதிகமான பொருட்களை விற்பனை செய்யும் இந்நிறுவனங்கள் இதற்கான தயார் எடுப்புகளில் கவனம் செலுத்தி வருகின்றன.
அமேசான் அக்டோபர் 10ஆம் தேதி தனது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை அறிவித்திருந்த நிலையில் பிளிப்கார்ட் அதற்கும் இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதாவது அக்டோபர் 8ஆம் தேதி பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்கான தேதியை அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே அமேசானும் அதே 8ஆம் தேதிக்கு தனது சலுகை விற்பனை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.
போட்டி போட்டுக்கொண்டு பண்டிகை கால விற்பனையில் களம் இறங்கியுள்ள இந்நிறுவனங்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு தள்ளுபடி அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளர்கள் எந்த வகையில் பயன்பெறலாம் என்பது குறிந்து தெரிந்துகொள்ளுங்கள்.
எந்தெந்த பொருட்களுக்கு 90 சதவீதம் தள்ளுபடி; இந்த பண்டிகை கால ஆன்லைன் விற்பனையில் குறிப்பாக ஸ்மார்ட் ஃபோன்கள் (smart Phone) மற்றும் எலக்ட்ரானிக் (electronic) பொருட்களுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடி எதிர்பார்க்கலாம். ப்ராண்டட் ஃபோன்களுக்கு (branded phone) நினைத்து பார்க்க முடியாத அளவு சிறப்பான தள்ளுபடி விற்பனை இருக்கும். குறிப்பாக பிளிப்கார்ட் நிறுவனம் Nothing Phone-களுக்கான தள்ளுபடியில் ரூ. 30 ஆயிரத்திற்கும் கீழ் சலுகையை அறிவிக்கும் எனவும் அதேபோல, google pixel 7 ஃபோன் ரூ. 40 ஆயிரத்திற்கு கீழும் கிடைக்கும் என நம்பலாம்.
அதேபோல அமேசான் நிறுவனம் apple iphone-களுக்கு கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சிறப்பான தள்ளுபடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக apple iphone- 13 ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எலக்ட்ரானிக் கேஜெட்கள் (gadget accessories), ஸ்மார்ட் வாச் உள்ளிட்ட அணிகலன்கள் (wearables), ஸ்பீக்கர்கள் (speakers), சவுண்ட்பார்கள் (soundbars) உள்ளிட்ட பல பொருட்களும் சிறப்பு தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்பெறலாம்.
அதேபோல அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ரூ.99 முதல் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்சஸரீஸ்கள் தள்ளுபடி விற்பனை மேற்கொள்ளும், அதேபோல ரூ.79 முதல் தினசரி அத்தியாவசிய பொருட்கள் தள்ளுடியில் கிடைக்கும். அதேபோல தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்படும்போது இருக்கும் பொருட்கள் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே விற்பனை செய்யப்படும் நிலையில் அதற்கு அடுத்தபடியாக வேறு பொருட்களை தள்ளுபடி விற்பனையில் அந்நிறுவனங்கள் அறிவிக்கும்.
வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது;
- பொருளை வாங்கும்போது அது செக்யூர் பேக்கேஜில் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அமேசான் நிறுவனம் இந்த செக்யூர் பேக்கேஜை இலவசமாக வழங்கும் நிலையில் பிளிப்கார்ட் இதற்கான கட்டணத்தை வசூல் செய்கிறது. மேலும், நீங்கள் வாங்கும் பொருள் செக்யூர் பேக்கேஜில் இல்லை என்றால், பொருளுக்கான இழப்பீட்டை அந்நிறுவனம் ஏற்றுக்கொள்ளாது.
- மேலும் நீங்கள் பொருளை வாங்கி அதை முதன் முதலாப பிரிக்கும்போது அதை முழுமையாக உங்கள் ஃபோனில் வீடியோவாக பதிவேற்றிக்கொள்ளுங்கள். ஏனென்றால் பொருளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதை ஆதாரத்துடன் நிறுபிக்க முடியும்.