ETV Bharat / business

உங்கள் பணம் பத்திரமாக உள்ளது- சக்திகாந்த தாஸ் - சக்திகாந்த தாஸ்

மும்பை: தனியார் வங்கியான யெஸ் வங்கியில் தொடர்ந்து வரும் சிக்கல்களால், வாடிக்கையாளர்கள் தாங்கள் டெபாசிட் செய்த பணம் திரும்ப வருமா என்ற அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் வாடிக்கையாளர்கள் பணம் பத்திரமாக உள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

Yes Bank Governor
Yes Bank Governor
author img

By

Published : Mar 17, 2020, 8:18 AM IST

யெஸ் வங்கியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தங்களது டெபாசிட் தொகையை எடுக்கத் தொடங்கியதால், வாடிக்கையாளர்கள் ஒரு வங்கிக் கணக்கில் ரூ.50,000க்கு மேல் எடுக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதோடு, வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார். ஏனெனில் வங்கி திவால் ஆகிவிட்டால் வாடிக்கையாளரின் பணம் மூழ்கிவிடும் என்ற அச்சம் மக்களிடையே இருந்தது.

இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதில், யெஸ் வங்கியின் எதிர்காலம் குறித்து யாரும் பயப்பட தேவையில்லை எனவும், டெபாசிட் பணம் பாதுகாப்பாக இருக்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.

மேலும் யெஸ் வங்கியின் நிர்வாகக் குழு கலைக்கப்பட்டு, மார்ச் 26ஆம் தேதிக்குப் பிறகு புதிய குழு அமைக்கப்படும். யெஸ் வங்கியிடம் போதிய நிதி இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் சீரமைப்பு நடவடிக்கை உரிய தீர்வைத் தரும். இவ்வங்கிக்கு மேலும் நிதி தேவைப்பட்டால் ரிசர்வ் வங்கி கண்டிப்பாக வழங்கும். மக்களின் டெபாசிட் பணம் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். பயந்துகொண்டு டெபாசிட் பணத்தை எடுக்கத் தேவையில்லை என்றும் கூறினார்.

இதையும் படிங்க: அப்பாடா பணவீக்கம் குறைஞ்சுடுச்சு
!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.