ETV Bharat / business

அடுத்தடுத்த வெற்றி; மாஸ் காட்டும் ஜியோமி! - vivo

சீன மொபைல் நிறுவனமான ஜியோமி இந்தியச் சந்தையில் தனது இருப்பை தொடர்ந்து நிலைநாட்டிவருகிறது.

ஜியோமி
author img

By

Published : Jul 26, 2019, 10:16 AM IST

சமீபத்தில் வெளியான அதிக வருவாய் ஈட்டும் ஃபார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் ஜியோமி சர்வதேச அளவில் 468ஆவது இடத்தையும், சீனாவில் 53ஆவது இடத்தையும் பிடித்தது. இந்தப் பட்டியலில் குறுகிய காலத்தில் இடம்பெற்ற நிறுவனம் என்ற சாதனையைப் படைத்த ஜியோமி, தற்போது மற்றொரு சாதனையையும் படைத்துள்ளது.

2019-இன் இரண்டாவது காலாண்டில், ஜியோமி நிறுவனம் இந்தியாவின் மொத்த மொபைல்ஃபோன் விற்பனையில் 28 விழுக்காடு பெற்றுள்ளது. இந்தக் காலாண்டில் மொத்தம் 37 மில்லியன் ஜியோமி மொபைல்ஃபோன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதேபோல சாம்சங் நிறுவனத்தின் விற்பனை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 7 விழுக்காடு குறைந்தாலும், கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் 30 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. மேலும் முதன்முதலாக இந்தப் பட்டியலில் ஓப்போ, விவோ, ரியல்மீ, ஒன் பிளஸ் ஆகிய நிறுவனங்களும் இடம்பிடித்துள்ளன. இந்நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக இந்தியச் சந்தையில் 30 விழுக்காடு விற்பனையைப் பெற்றுள்ளது.

அதேபோல ப்ரீமியம் செக்மென்ட் எனப்படும் விலையுயர்ந்த மொபைல்ஃபோன் சந்தையில் ஒன்பிளஸ், சாம்சங் முன்னணியில் உள்ளன. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவரும் ஹவாய் நிறுவனத்தின் விற்பனை இந்த காலாண்டிலும் குறைந்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.