தொடர்ந்து குறைந்துவரும் கரோனா பாதிப்பு, அமெரிக்க ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட உயர்வு, பட்ஜெட் பற்றிய எதிர்பார்ப்பு, அதிகரித்து வரும் அந்நிய முதலீடுகள், இந்தாண்டு மார்ச் மாதத்திற்குள் வங்கிகளின் வாராக்கடன் மீதான சொத்துக்களை விற்று வங்கிகளுக்கு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றால் புதிய உத்வேகம் பெற்றன, பங்குச்சந்தைகள்.
வாரத்தின் முதல் தினமான இன்று(ஜன.31) சற்றே திகைக்கவைத்தது. இந்நாளைய வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 814 புள்ளிகள் உயர்ந்தும், நிஃப்டி 238 புள்ளிகள் உயர்ந்தும் முடிந்தன.
![Stock Market: திகைக்க வைத்த திங்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-5a-stockmarketimage-7210723_31012022164711_3101f_1643627831_79.jpg)