ETV Bharat / business

பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன? நிபுணரின் ஆலோசனை - Stock Market expert's ideas for small investers

சென்னை: தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக இருக்கும் பங்குச்சந்தையில் சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பங்குச்சந்தை நிபுணர் அருள் ராஜன் சில ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

buisness
author img

By

Published : Nov 1, 2019, 2:31 PM IST

இந்தியப் பொருளாதாரம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மந்தநிலையை சந்தித்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியானது. உள்நாட்டு உற்பத்தியும் குறைந்ததால் பெரும்பாலான தொழில்கள் முடங்கும் அபாயமும் ஏற்பட்டது. இதேவேளையில் இந்தியப் பங்குச்சந்தைகளும் கடந்த சில நாள்களாகவே தொடர்ந்து சரிவை சந்தித்தன. இந்தச் சூழலில் இந்தியப் பங்குச்சந்தைகள் நேற்று வரலாறு காணாத அளவிற்கு உயர்வு கண்டன.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றம் தொடர்பாக பேசிய பங்குச்சந்தை நிபுணர் அருள் ராஜன், "இந்தியப் பங்குச்சந்தைகள் இவ்வளவு பெரிய ஏற்றம் காண பல காரணங்கள் உள்ளன. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஐசிஐசிஐ வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் உள்ளிட்ட ஒரு சில நிறுவன பங்குகளின் எழுச்சிதான் ஒட்டுமொத்த பங்குச்சந்தை குறியீடுகள் உயர காரணமாக அமைந்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்திலிருந்து மிகப்பெரிய இறக்கத்தைச் சந்தித்துவந்த பங்குச்சந்தை குறியீடுகள், குறுகிய காலத்தில் 40 ஆயிரத்தை தொட்டுள்ளன.

பங்குச்சந்தை ஏற்றத்திற்கான காரணம்

பெரு நிறுவனங்களுக்கான வரிச் சலுகைகள், உள்கட்டமைப்பு திட்டங்களில் அரசு அதிக செலவு செய்தது உள்ளிட்டவை மூலமாக நாட்டில் தேவை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. கடந்த சில நாள்களுக்கு முன்புவரை அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்துவந்த நிலை தற்போது மாறியுள்ளது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்துவருகின்றனர்.

எஸ்.ஐ.பி. எனப்படும் மாதாந்திர பணம் செலுத்தும் திட்டம் மூலமாக மக்கள் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஒப்பீட்டு அளவில் சிறப்பாக உள்ளது. இதனால் அந்நிய முதலீட்டாளர் அதிக அளவில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. இனிவரும் நாள்களில் பொருளாதாரம் மீண்டுவர வாய்ப்புள்ளது" என்றார்.

பின்னர் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய விரும்பும் சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "எஸ்ஐபி வழியாக முதலீடு செய்யலாம். முழுப் பணத்தையும் மொத்தமாக முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம். இதன்மூலம் காஸ்ட் ஆஃப் ஆவரேஜ் என்று அழைக்கப்படும் சராசரி வருவாய் பாதிப்பில்லாமல் கிடைக்கும். சந்தையின் இறக்கத்தையும் சாதகமாகப் பயன்படுத்தலாம். தற்போதைய சூழலில் சந்தையில் ஒரு சில பங்குகளின் விலை மட்டுமே உயர்ந்துவருகிறது.

பங்குச்சந்தையில் சிறு முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

சந்தையில் சரிவு ஏற்பட்டால் இதே பங்குகள்தான் விலை குறையும். இதனால் முதலீடு செய்த பங்குகளின் மதிப்பு குறையும். சிறு முதலீட்டாளர் நிதானமாக தங்களது ஃபோர்ட்போலியோவை உருவாக்க வேண்டும். முதலீடு செய்யும் துறைகளை கவனமாக தேர்ந்தெடுத்து பணத்தை பிரித்து முதலீடு செய்வதில் கவனம் கொள்ள வேண்டும்.

எஃப்.எம்.சி.ஜி. என்று அழைக்கப்படும் வேகமாக விற்பனையாகும் நுகர்வு பொருள்களின் பங்குகள், வங்கித் துறை பங்குகள், ஆட்டோமொபைல் துறை பங்குகள் ஆகியவற்றில் தற்போது முதலீடு செய்யலாம். கடந்த நான்கு மாதங்களாக சரிவை சந்தித்துவந்த ஆட்டோமொபைல் துறை பங்குகள் தற்போது பண்டிகைகால விற்பனைக்குப் பிறகு எழுச்சி பெற்றிருக்கின்றன. இதனால் வாகனத் துறை பங்குகளில் முதலீடு செய்யலாம்" என்று கூறினார்.

நேற்றைய வர்த்தக நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 40 ஆயிரத்து 392 புள்ளிகளைத் தொட்டு புதிய உச்சத்தை அடைந்து பின்னர் வர்த்தக நேர முடிவில் சற்று சரிந்து 40 ஆயிரத்து 129 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல் தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 33 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 877 புள்ளிகளில் நிறைவடைந்தது.

Intro:Body:கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று வரலாறு காணாத உயர்வு கண்டுள்ளன. இன்றைய வர்த்தக நேரத்தில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், 40,392 புள்ளிகளைத் தொட்டு புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர் வர்த்தக நேர முடிவில் சற்று சரிந்து 40,129 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, 33 புள்ளிகள் உயர்ந்து 11,877 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இது தொடர்பாக பேசிய பங்குச் சந்தை நிபுணர் அருள் ராஜன், "இந்திய பங்குச் சந்தைகள் இவ்வளவு பெரிய ஏற்றம் காண பல காரணங்கள் உள்ளன. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஐசிஐசிஐ வங்கி, ஏசியன் பெய்ன்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் உள்ளிட்ட ஒரு சில நிறுவன பங்குகளின் எழுச்சிதான் ஒட்டுமொத்த பங்குச் சந்தை குறியீடுகள் உயர காரணமாக அமைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மிகப் பெரிய இறக்கத்தை சந்தித்து வந்த பங்குச் சந்தை குறியீடுகள், குறுகிய காலத்தில் 40 ஆயிரத்தை தொட்டுள்ளன. பெரு நிறுவனங்களுக்கான வரிச் சலுகைகள், உள்கட்டமைப்பு திட்டங்களில் அரசு அதிக செலவு செய்தது உள்ளிட்டவை மூலமாக நாட்டில் தேவை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வந்த நிலை தற்போது மாறியுள்ளது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். எஸ்.ஐ.பி எனப்படும் மாதாந்திர பணம் செலுத்தும் திட்டம் மூலமாக மக்கள் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். உலக பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி ஒப்பீட்டு அளவில் சிறப்பாக உள்ளது. இதனால் அந்நிய முதலீட்டாளர் அதிக அளவில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. இனி வரும் நாட்களில் பொருளாதார மீண்டு வர வாய்ப்புள்ளது" என்றார்.

இந்த நேரத்தில் சிறு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்கலாமா? வேறு பங்குகளை வாங்கலாமா?
சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

"எஸ்ஐபி வழியாக முதலீடு செய்யலாம். முழுப் பணத்தையும் மொத்தமாக முதலீடு செய்வதை தவிர்க்கலாம். இதன்மூலம் காஸ்ட் ஆஃப் அவரேஜ் என்று அழைக்கப்படும் சராசரி வருவாய் பாதிப்பில்லாமல் கிடைக்கும். சந்தையின் இறக்கத்தையும் சாதகமாக பயன்படுத்தலாம். தற்போதைய சூழலில் சந்தையில் ஒரு சில பங்குகளின் விலை மட்டுமே உயர்ந்து வருகிறது. சந்தையில் சரிவு ஏற்பட்டால் இதே பங்குகள்தான் விலை குறையும் இதனால் முதலீடு செய்த பங்குகளின் மதிப்பு குறையும். சிறு முதலீட்டாளர் நிதானமாக தங்களது ஃபோர்ட்போலியோவை உருவாக்க வேண்டும். எந்த வகையான துறைகளில் முதலீடு செய்ய வேண்டும், பணத்தை எவ்வாறு பிரித்து முதலீடு செய்வது என்பதில் கவனம் கொள்ள வேண்டும். எஃப்எம்சிஜி என்று அழைக்கப்படும் வேகமாக விற்பனையாகும் நுகர்வு பொருட்களின் பங்குகள், வங்கித்துறை பங்குகள், ஆட்டோமொபைல் துறை பங்குகள் ஆகியவற்றில் தற்போது முதலீடு செய்யலாம். கடந்த நான்கு மாதங்களாக சரிவை சந்தித்து வந்த ஆட்டோமொபைல் துறை பங்குகள் தற்போது பண்டிகைகால விற்பனைக்குப் பிறகு எழுச்சி பெற்றிருக்கின்றன. இதனால் வாகனத்துறை பங்குகளில் முதலீடு செய்யலாம்" என்று கூறினார். Conclusion:((பைட்: அருள் ராஜன், பங்குச் சந்தை நிபுணர்))
((Visual in mojo))
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.