மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (ஏப்.1) 521 புள்ளிகள் (1.05 விழுக்காடு) உயர்ந்து 50,030 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 177 புள்ளிகள் (1.2 விழுக்காடு) உயர்ந்து 14,867 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவுசெய்தது.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக, இன்டஸ்இன்ட் வங்கி பங்குகள் நான்கு விழுக்காடு உயர்வு கண்டது. அதற்கு அடுத்தபடியாக கோடக் மஹிந்திரா வங்கி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.
அதேவேளை இந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட், நெஸ்லே இந்தியா, டி.சி.எஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவைக் கண்டன.
இதையும் படிங்க: கோவிட்-19: சமாளித்து உயர்வு கண்ட ரயில்வே துறை