வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 600.87 புள்ளிகள் (1.54 விழுக்காடு) உயர்ந்து 39,574.57 புள்ளியிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 159.05 புள்ளிகள் (1.38 விழுக்காடு) உயர்ந்து 11,662.40 புள்ளியிலும் வர்த்தகம் நிறைவடைந்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:
அதிகபட்சமாக ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பங்குகள் 8.35 விழுக்காடு உயர்வைச் சந்தித்தது. அதற்கு அடுத்தபடியாக இன்டஸ்இன்ட் வங்கி, மகிந்திரா அண்ட் மகிந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் பைனாஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வைச் சந்தித்தன. அதேவேளை டாடா ஸ்டீல், நெஸ்லே இந்தியா, லார்சன் அண்ட் டர்போ, சன் பார்மா, என்டிபிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் சரிவைக் கண்டன.
தங்கம், வெள்ளி விலை:
சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50,849-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.62,141-க்கு விற்பனையானது.
பெட்ரோல், டீசல் விலை:
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கும் விற்பனையானது.
இதையும் படிங்க: ரிசர்வ் வங்கிக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு: நாளை ஆலோசனைக் கூட்டம்