இந்திய பங்குச் சந்தைகள் கடந்த வாரம் வியாழக்கிழமை (ஏப்.30) வர்த்தகத்தின் போது, மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ) 997.46 புள்ளிகள் (3.05) புள்ளிகள் வரை உயர்வை கண்டு சென்செக்ஸ் 33,717.62 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது.
தேசியப் பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் 306.55 புள்ளிகள் (3.21) அதிகரித்து நிஃப்டி 9.859.90 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. வெள்ளிக்கிழமை மகாராஷ்டிரா தினம் என்பதால் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் வாரத்தின் முதல் நாள் வர்த்தகம் இன்று தொடங்கியது. தொடக்கம் முதலே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1700 புள்ளிகள் சரிந்தும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 9,300 புள்ளியிலும் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.
ஐசிஐசிஐ வங்கி பங்குகள் அதிகபட்சமாக 8 விழுக்காடு வரை சரிவை சந்தித்துள்ளன. அடுத்த இடங்களில் இண்டஸ்வங்கி, டாடா ஸ்டீல், பஜாஜ் நிதி நிறுவனம், ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் காணப்படுகின்றன.
அந்த வகையில் தற்போது மும்பை பங்குச் சந்தை பி.எஸ்.இ. 32,203.94 ஆகவும், தேசிய பங்குச் சந்தை 4.32 விழுக்காடு வரை வீழ்ந்து நிஃப்டி 9,434.20 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: பாங்க் ஆப் பரோடா வங்கி செயல்படாத சொத்துகள் ஆறு மடங்கு அதிகரிப்பு!