நாட்டின் பொருளாதார மந்த நிலையின் தாக்கம் பங்குச்சந்தையிலும் எதிரொலித்துவந்த நிலையில், நேற்று 500 புள்ளிகளுக்கும் மேல் குறைந்து கடும் சரிவைச் சந்தித்தது.
இந்நிலையில் பொருளாதாரச் சிக்கலை சீர்செய்யும் விதமாக புதிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 20ஆம் தேதி அறிவித்தார். உள்நாட்டு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் வரி குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் நிதியமைச்சரின் அறிவிப்பில் இருந்தது.
இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,921.15 புள்ளிகளுடனும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 570.65 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் தேசிய பங்குச்சந்தையும் மும்பை பங்குச்சந்தையும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க...'உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி குறைப்பு' - நிர்மலா சீதாராமன்