இந்திய பொருளாதார சரிவால் வீழ்ச்சியை சந்தித்த பங்கு சந்தை, 2019-2020ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கைக்கு பிறகு உயர்வை சந்திக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், நிதிநிலை அறிக்கை வெளிவந்த ஒரே வாரத்தில் 17 ஆண்டுகளில் காணாத மிகப்பெரிய வீழ்ச்சியை இந்திய பங்கு சந்தை சமீபத்தில் சந்தித்தது. இதன் காரணமாக ஆசியாவில் முதன்முதலாக தொடங்கப்பட்ட மும்பை பங்கு சந்தை செய்வதறியாது திகைத்து நின்றது. நாளுக்கு நாள் நிலை இல்லாமல் உயர்வையும், வீழ்ச்சியையும் சந்தித்த பங்கு சந்தை கடந்த சுகந்திர தினத்தன்று ஓரளவுக்கு ஏறுமுகம் கண்டது.
இதனையடுத்து மீண்டும் சரிவை சந்தித்த பங்கு சந்தை இன்று சென்செக்ஸில் 600 புள்ளிகள் குறைந்து காணப்பட்டது. இது இந்திய பங்கு சந்தையில் காணப்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.
கடந்த வாரம் சிறப்பாக இருந்த வேதாந்தா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பங்குகள் இந்த வாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளன.
அதேபோல், ஹெச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ போன்ற வங்கி பங்குகளும் சரிந்துள்ளன. குறிப்பாக, எஸ் பேங்க்கின் பங்குகள் 14 விழுக்காடு குறைந்துள்ளது.
அதுமட்டுமின்றி, இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எஃப் (DLF Limited) பங்குகள் 16 விழுக்காடு குறைந்து பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.