ETV Bharat / business

நிதியாண்டின் கடைசி நாள் - ஏற்றத்தில் முடிந்த பங்குச் சந்தைகள்

மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

பங்குச் சந்தைகளில் ஏற்றம்
author img

By

Published : Mar 29, 2019, 6:27 PM IST

இன்றைய (மார்ச் 29) வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 127.19 புள்ளிகள் (0.33 சதவிகிதம்) அதிகரித்து, 38,672.91 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 53.90 புள்ளிகள், அதாவது 0.47 சதவிகிதம் உயர்ந்து 11,623.90 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.

அதிகபட்சமாக வேதாந்தா நிறுவன பங்குகள் 3.20 உயர்வை சந்தித்தன. டாடா ஸ்டீல், டாடா மோட்டர்ஸ், எம்&எம், ஓஎன்ஜிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், மாருதி, ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்டிஃஎப்சி, பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, ஹெச்டி.ஃபெசி, ஹெச்சிஎல், சன் ஃபார்மா, இன்ஃபோசிஸ், கோல் இந்தியா, ரிலையன்ஸ், பாரதி ஏர்டெல் ஆகிய பங்குகள் 2.69 சதவிகிதம் வரை உயர்ந்தன. அதேவேளையில், இன்டஸ்இன்ட் வங்கியின் பங்குகள் 2.08 சதவிகித சரிவை சந்தித்தன.

சர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் வரை உயர்ந்து 69.17 காசுகளாக வர்த்தகமானது.

இந்திய பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து அதிகளவில் முதலீடு செய்வது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்து வருவது, அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை சந்தை எழுச்சி பெற முக்கிய காரணிகளாகக் கூறப்படுகிறது. வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் நடப்பு 2018-19 நிதியாண்டு முடிவடையும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை என்பதால் நிதியாண்டின் கடைசி நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.