ETV Bharat / business

ஒரே நாளில் ரூ. 425 சரிந்த தங்கம் விலை! - Rs. 400 collapsed gold price in chennai

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 424 ரூபாய் குறைந்து, 30 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold price
gold price
author img

By

Published : Jan 7, 2020, 1:03 PM IST

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை நேற்று (ஜன. 06) 512 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று 424 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 53 குறைந்து 3 ஆயிரத்து 843 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ. 1.20 குறைந்து 51 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold price

ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால் சர்வதேச சந்தைகளில் நிலையற்ற தன்மை தொடர்ந்து வருகிறது. மத்திய கிழக்கு பகுதிகளில் போர் ஏற்படும் அபாயம் இருந்ததால், பங்குச் சந்தைகளில் உள்ள தங்கள் பங்குகளை தங்கம், கடன் பத்திரம் போன்றவற்றில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்தனர். இதனால் தங்கத்தின் விலை கடும் உயர்வை சந்தித்ததாக பங்குச் சந்தை நிபுணர்கள் கூறினர்.

இந்நிலையில் இந்த பதற்றம் சற்று தனிந்துள்ளதாலும், சர்வதேச சந்தைகள் சீராக இருப்பதாலும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலை உயராமல் இருப்பது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வது ஆகியவையும் இந்த மாற்றத்துக்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Intro:Body:

400 ரூபாய் குறைந்த தங்கம் விலை!

சென்னை:

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 424 ரூபாய் குறைந்துள்ளது.

ஈரானுக்கு அமெரிக்காவுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால் சர்வதேச சந்தைகளில் நிலையற்ற தன்மை தொடர்ந்து வருகிறது. சென்னையில் ஒரு சரவன் ஆபரண தங்கத்தின் (22 கேரட்) விலை நேற்று 512 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று 424 ரூபாய் குறைந்து 30,744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு 53 குறைந்து 3,843 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு் 1.20 ரூபாய் குறைந்து 51 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஈரான் மீதான தாக்குதலுக்குப் பிறகு பங்குச் சந்தைகளில் தொடர் சரிவு ஏற்பட்டது. மத்திய கிழக்கு பகுதியில் போர் மூளும் அபாயம் இருந்ததால் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் உள்ள தங்கள் பங்குகளை விற்பனை செய்து தங்கம், கடன் பத்திரங்கள் போன்ற பாதுகாப்பானவற்றில் முதலீடு செய்ததால் தங்கத்தின் விலை கடும் உயர்வை சந்தித்ததாக பங்குச் சந்தை நிபுணர்கள் கூறினர். இந்த நிலையில் இந்த பதற்றம் சற்று தனிந்துள்ளதாலும், சர்வதேச சந்தைகள் சீராக உள்ளதாலும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை மேலும் உயராமல் இருப்பது மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வது ஆகியவையும் இந்த மாற்றத்துக்கு காரணமாக நிபுணர்கள் கூறுகின்றனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.