ஹவேரி (கர்நாடகா): பியாடாகி சந்தையில் காய்ந்த மிளகாய் அமோகமாக விற்பனையானதால், விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பியாடாகி சந்தையில் டப்பி ரக மிளகாய் வரலாறு காணாத விலையைத் தொட்டு சந்தையில் விற்பனையாகியுள்ளது. இதன் நிறம், குணத்தின் காரணமாக, அனைவரும் இதனை பெரிதும் விரும்பி வாங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஒரு குவிண்டாலுக்கு ரூ.45,100 வரை விலை கொடுத்து இதனை வர்த்தகர்கள் வாங்கிச் சென்றுள்ளனர்.
தென் இந்தியாவில் உள்ள அனைத்து மிளகாய் விவசாயிகளும் பியாடாகி சந்தையை பெரிதும் விரும்புகின்றனர். இதற்கு சந்தையில் கிடைக்கும் அதிக விலை தான் காரணமாக பார்க்கப்படுகிறது.
சின்னப்ப கவுடா எனும் விவசாயி தன் விளைபொருளான இரண்டு குவிண்டால் காய்ந்த மிளகாயை பியாடாகி சந்தையில் கொண்டு விற்று வரலாறு சாதனைப் படைத்துள்ளார். ஆம், அவர் தன் மிளகாயைக் குவிண்டாலுக்கு ரூ.55,329 என விலை நிர்ணயம் செய்து இதே சந்தையில் விற்றுள்ளார்.