கரோனா நெருக்கடியைச் சமாளிப்பதற்கான பொருளாதார நடவடிக்கைகளை அறிவிக்க மூன்றாவது முறையாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி வங்கிக்குத் தவணை முறையில் செலுத்த வேண்டிய EMI காலத்தை மீண்டும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்தார்.
அதாவது ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை வங்கிக்கு EMI செலுத்த வேண்டாம். இந்த அறிவிப்பு அனைத்து மக்களுக்கும் பயன்பெறும் எனப் பல துறை தலைமை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 'இந்த EMI காலநீட்டிப்பு விமான நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவு: நிர்வாகக் குழு அமைப்பு