ETV Bharat / business

பருப்புக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியில் மாற்றம் இல்லை - மத்திய இணையமைச்சர் - ஜிஎஸ்டியில் மாற்றம் இல்லை

டெல்லி: பருப்புக்கு தற்போது விதிக்கப்பட்டுவரும் சரக்கு மற்றும் சேவை வரியில், விலக்கு அளிக்கப்படுமா என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டபோது, தற்போது பருப்புக்கு விதிக்கப்பட்டுவரும் சரக்கு மற்றும் சேவை வரியில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை என மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்

No plan to reduce GST rate on branded pulses

author img

By

Published : Mar 3, 2020, 2:40 PM IST

Updated : Mar 3, 2020, 3:09 PM IST

தற்போது மத்திய அரசு பருப்புக்கு ஐந்து சதவிகிதம் சரக்கு மற்றும் சேவை வரி விதித்துள்ளது. அன்றாடம் பயன்படுத்தும் பருப்புக்கு ஐந்து சதவிகிதம் சரக்கு மற்றும் சேவை வரி என்பது அதிகமான ஒன்று என்றும், இதனால் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது எனவும் கொள்முதல் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பியபோது, ஐந்து சதவிகிதம் சரக்கு மற்றும் சேவை வரி என்பது பிராண்டட் பருப்புகளுக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. பிராண்டட் அல்லாமல் விற்கப்படும் பருப்புக்கு எந்த ஒரு சரக்கு மற்றும் சேவை வரியும் விதிக்கப்படவில்லை என மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

மேலும் நடைமுறையில் உள்ள பருப்புக்கு வழங்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் எந்த ஒரு சலுகையும் கொண்டுவரப்படவில்லை என்றும் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி - பியூஸ் கோயல்

Last Updated : Mar 3, 2020, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.