மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்றைவிட சுமார் 200 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தை தொடங்கியது. ஒரு கட்டத்தில் சுமார் 560 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது. இருப்பினும், பிற்பகலில் முதலீட்டாளர்கள் பங்குகளை, குறிப்பாக நிதி நிறுவனங்களின் பங்குகளை, விற்கத் தொடங்கியதால் இந்திய பங்குச் சந்தை சரிவை சந்தித்தது.
அதன்படி, இன்றைய வர்த்தக நாள் இறுதியில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 561.45 புள்ளிகள் (1.58 விழுக்காடு) சரிந்து 34,868.98 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 165.70 புள்ளிகள் (1.58 விழுக்காடு) சரிந்து 10,305.30 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் 7.43 விழுக்காடு வரை சரிவடைந்தது. அதேபோல் பஜாஜ் பைனான்ஸ், பவர் கிரிட், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.
மறுபுறம், ஆசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி, நெஸ்லே இந்தியா, டெக் மஹேந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
சர்வதேச பங்குச் சந்தை
ஹாங்காங், டோக்கியோ பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. அதேநேரம் ஷாங்காய், சியோல் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு காரணமாக பாரிஸ், பிராங்பேர்ட் உள்ளிட்ட ஐரோப்பிய பங்குச் சந்தைகள் சரிவடைந்து தற்போது வர்த்தகமாகி வருகின்றன.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 1.15 விழுக்காடு குறைந்து, பேரல் ஒன்று 42.14 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகி வருகிறது.
இதையும் படிங்க: சீன நிறுவனங்களுக்கு எதிராக அதிகரிக்கும் வெறுப்பு, பயனடையும் சாம்சங் நிறுவனம்!