மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று வர்த்தகமானதைவிட சுமார் 321 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. மதியம் திடீரென்று சுமார் 500 புள்ளிகள் குறைந்த இந்திய பங்குச்சந்தை பின்னர், மீண்டும் ஏற்றம் கண்டு வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இன்றைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 355 புள்ளிகள் (0.88 விழுக்காடு) உயர்ந்து 40,616 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 95 புள்ளிகள் (0.80 விழுக்காடு) உயர்ந்து 11,908.50 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் 4.89 விழுக்காடு உயர்ந்தது. மேலும், சன் பார்மா, டிவி'ஸ் லபோர்டோரிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சிப்லா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
மறுபுறம் யுபிஎல், ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ வங்கி, ஹிண்டல்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.
தங்கம், வெள்ளி விலை
சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் உயர்ந்து ரூ.48,020-க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளியின் விலை 700 ரூபாய் குறைந்து, ஒரு கிலோ ரூ.61,200க்கு விற்பனையானது.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், டீசல் ரூ.75.95-க்கும் விற்பனையானது.
இதையும் படிங்க: தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை