இன்றைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 94.71 புள்ளிகள் உயர்ந்து 38,067.93 புள்ளிகளிலும், தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 4.10 புள்ளிகள் உயர்ந்து 11,226.50 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:
அதிகபட்சமாக கிராசிம் நிறுவனப் பங்குகள் சுமார் 2.99 விழுக்காடு உயர்வைச் சந்தித்தது. அதற்கு அடுத்தபடியாக டெக் மகேந்திரா, டைட்டான், நெஸ்லே இந்தியா, டாக்டர் ரெட்டி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வை சந்தித்தன.அதேவேளை, பி.பி.சி.எல், பாரசி ஏர்டெல், டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபள்யு. ஸ்டீல், இன்டஸ் இன்ட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.
தங்கம், வெள்ளி விலை:
சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,340 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிலோ 61,000 ரூபாய்க்கு விற்பனையானது.
பெட்ரோல், டீசல் விலை:
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய் 14 பைசாக்களுக்கும், டீசல் 76 ரூபாய் 10 பைசாக்களுக்கும் விற்பனையானது.
இதையும் படிங்க: நாட்டின் நடப்பு உபரித் தொகை உயர்வு - ரிசர்வ் வங்கி தகவல்