ETV Bharat / business

மீண்டும் ஏற்றத்தின் பாதைக்கு திரும்பிய இந்திய பங்குச்சந்தை - Top loosers

மும்பை: நேற்று இறக்கத்தில் வர்த்தகமான இந்திய பங்குச்சந்தை இன்றும் மீண்டும் ஏற்றத்தின் பாதைக்கு திரும்பியுள்ளது.

மீண்டும் ஏற்றத்தின் பாதைக்கு திரும்பிய இந்திய பங்குச்சந்தை

author img

By

Published : Dec 11, 2020, 6:13 PM IST

கடந்த சில நாள்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வர்த்தகமாகிவரும் இந்திய பங்குச்சந்தை, நேற்று திடீரென்று சிறிய சரிவைச் சந்தித்தது. இந்நிலையில், இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 101 புள்ளிகள் உயர்ந்து 46,060 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை தொடங்கியது.

தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகமான மும்பை பங்குச்சந்தை பங்குகள் மதியம் ஒரு மணிக்கு மேல் திடீரென்று சுமார் 400 புள்ளிகள் சரிவைச் சந்தித்தது. அதன் பின்னர், மீண்டும் மூன்று மணி அளவில் ஏற்றத்தின் பாதைக்கு திரும்பியது.

இன்றைய வர்த்தக நாள் இறுதியில் சென்செக்ஸ் இன்று சுமார் 139.13 (0.30%) புள்ளிகள் உயர்ந்து 46,099.01 புள்ளிகளிலும் தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 35.55 (0.26%) புள்ளிகள் உயர்ந்து 13,513.85 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

ஏற்றம் - இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் பங்குகள் 5.4% விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்து வர்த்தகமானது. அதேபோல என்.டி.பி.சி., கெயில், கோல் இந்தியா, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

மறுபுறம் ஆக்ஸிஸ் வங்கி, திவிஸ் லேப், ஆதானி போர்ட்ஸ், ஐஷர் மோட்டார்ஸ், எம் & எம் நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.

மீண்டும் ஏற்றத்தின் பாதைக்கு திரும்பிய இந்திய பங்குச்சந்தை

தங்கம், வெள்ளி விலை

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 100 ரூபாய் அதிகரித்து 46,320 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளியின் விலை 10 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 63,410 ரூபாய்க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பு மருந்து விநியோகம் - களத்தில் இறங்கிய ஸ்பைஸ்ஜெட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.