மும்பை: நடைபெறவிருக்கும் ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் ஆட்டொமொபைல் துறைக்கு சலுகைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை அத்துறை பங்குகள் இன்று ஏற்றத்தைக் கண்டு, பங்கு சந்தை வர்த்தகத்துக்கு நல்ல ஆதரவைத் தந்தது.
பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்
ஜீ எண்டெர்டெய்ன், இண்டஸ்இந்த் வங்கி, டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டார்கார்ப், ரிலையன்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. பார்தி ஏர்டெல், அல்ட்ராடெக் சிமெண்ட், பிரிட்டானியா, ஏசியன் பெய்ண்ட்ஸ், மாருதி சுசுகி போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.
பங்குச் சந்தை
இன்றைய வர்த்தக நாள் முடிவில்,
- மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 230.04 புள்ளிகள் உயர்ந்து 39,073.92 புள்ளிகளாக இருந்தது.
- தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 77.35 புள்ளிகள் உயர்ந்து 11,549.60 புள்ளிகளில் நிறைவுற்றது.
ரூபாய்
74 ரூபாய் 33 காசுகளாக நிலை பெற்றிருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து 74 ரூபாய் 30 காசுகளாக இருந்தது.
பொருள் வணிகச் சந்தை
- கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 3 புள்ளிகள் சரிந்து 3,223 ரூபாயாக வர்த்தகமானது.
- தங்கத்தின் விலை தற்போதைய நிலவரப்படி 153 புள்ளிகள் சரிந்து 50,771 ரூபாயாக வர்த்தகமானது.
- வெள்ளியின் விலை தற்போதைய நிலவரப்படி 207 புள்ளிகள் சரிந்து 63,800 ரூபாயாக வர்த்தகமானது.