இந்தியாவில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25ஆம் தேதியில் இருந்து லாக்டவுன் அமலில் இருக்கிறது. இதுவரை நான்கு முறை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருமுறையும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 31ஆம் தேதி ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மீண்டும் ஐந்தாவது முறையாக லாக்டவுன் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். லாக்டவுன் 5.0 குறித்து நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநில முதலமைச்சர்களிடம் ஆலோசனை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய லாக்டவுன் 5.0யில் நிறைய தளர்வுகள் கொண்டு வரப்படும் என்கிறார்கள். சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் எப்போதும் போல இருக்கும் என தெரியவந்துள்ளது. புதிதாக வரப்போகும் லாக்டவுன் 5.0யில் சுற்றுலாத்துறைக்கு கணிசமான தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவா, கேரளா போன்ற மாநிலங்கள் முற்றிலுமாக சுற்றுலாத்துறையை நம்பி இருப்பதால் அத்துறைக்கு தளர்வுகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த தளர்வு புதுச்சேரிக்கும் பொருந்தும்.
இதையும் படிங்க: வெட்டுக்கிளி தாக்குதல்: பூச்சிமருந்து தெளிக்கும் ட்ரோன்கள் முன்னோட்டம்