ETV Bharat / business

'இந்த அட்சய திருதியையில் தங்கம் வாங்காதீங்க' ஜோதிடம் கூறுவதென்ன? - தங்கம் வாங்குவதற்கு

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால்தான் மதிப்புக்கூடும் என ஜோதிடம் கூறுகிறது.

அட்சய திருதியை தங்கம் வாங்குவதற்கு உகந்தல்ல
author img

By

Published : May 7, 2019, 10:39 AM IST

சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியைதான் அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. அன்றைய நாளில் சூரியன் உச்சம், சந்திரன் உச்சம், சுக்கிரன் உச்சம் என எல்லாவற்றிற்கும் மேலாக தங்கத்திற்கு அதிபதியான குரு உச்சமாக இருக்க வேண்டும். அதுவே உண்மையான அட்சய திருதியை என்கிறது ஜோதிடம்.

இந்த அமைப்பில் இருக்கும்போது வாங்கப்படும் எந்தவொரு பொருளுக்கும் மதிப்பும், வளர்ச்சியும் நிச்சயம் உண்டு.

ஆனால் தற்போது இன்று வந்துள்ள அட்சய திருதியை தங்கம் வாங்குவதற்கு ஏற்றதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் குரு தற்போது வக்ர கதியில் இருக்கிறார். தங்கத்திற்கு அதிபதி வக்ர கதியில் இருப்பதால், அதாவது தனது இயல்பு நிலைக்கு எதிராக இருக்கும்போது தங்கம் வாங்குவது எந்த வகையிலும் உகந்ததல்ல. வளர்ச்சியும் தராது.

தங்கம் வாங்கும் அட்சய திருதியை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும். இது 2015ஆம் ஆண்டு வந்தது. இனி 2027ஆம் ஆண்டுதான் தங்கம் வாங்குவதற்கு உகந்த நாள் வரும் என்று ஜோதிடம் கூறுகிறது.

Intro:Body:

https://timesofindia.indiatimes.com/city/chennai/fewer-flight-tickets-leave-many-patients-waiting-long-for-organs/articleshow/69209645.cms

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.