ETV Bharat / business

பங்குச்சந்தையில் சிறப்பான அறிமுகம் கண்ட இண்டிகோ பெயிண்ட்ஸ் - தேசிய பங்குச்சந்தை இண்டிகோ பெயின்ட்ஸ்

தேசிய பங்குச்சந்தையில் சிறப்பான அறிமுகம் கண்ட இண்டிகோ பெயிண்ட்ஸ் நிறுவனம் சிறப்பான அறிமுகம் கண்டுள்ளது.

Indigo
Indigo
author img

By

Published : Feb 2, 2021, 1:05 PM IST

இண்டிகோ பெயிண்ட்ஸ் நிறுவனம் இன்று முதல் முறையாக பங்குச்சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பூனாவைச் சேர்ந்த அலங்கார பெயிண்ட் தயாரிப்பு நிறுவனமான இண்டிகோ பெயிண்ட்ஸ் நாடு முழுவதும் பல கிளைகளைக் கொண்டுள்ளது.

அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.11,684 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.1,488- ரூ.1,490 ஆக அடிப்படைத் தொகை நிர்ணயம்செய்யப்பட்டது. சந்தை ஏலத்தில் இதன் மதிப்பு 75 விழுக்காட்டைத் தாண்டி ரூ.2,607.50-க்கு விற்பனை ஆனது. இதன்மூலம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இண்டிகோ நிறுவனத்திற்குச் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: பட்ஜெட் 2021-22: தூய்மை இந்தியா 2.0 திட்டத்திற்கு ரூ.1.41 லட்சம் கோடி ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.