பொது விடுமுறை தினமான இன்று இந்தியப் பங்குச் சந்தைகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை எப்போதும் போல் பங்குச் சந்தை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய வர்த்தகச் சந்தை முடிவில், 10 ஆண்டுகால பத்திரப் பங்கின் மதிப்பு சரிந்து 7.52 விழுக்காடாக இருந்தது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 ரூபாய் 81 காசுகளாக இருந்தது. அதே நேரத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீடு 38,386.75 புள்ளிகளுடன் முடிந்திருந்தது.