ETV Bharat / business

Market update today: வாரத்தின் முதல் நாளில் ஆட்டம் கண்ட இந்திய சந்தைகள் - இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இன்றைய வர்த்தக நாள் முடிவில் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.

Market update today
Market update today
author img

By

Published : Feb 7, 2022, 5:18 PM IST

Updated : Feb 7, 2022, 7:56 PM IST

வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவைக் கண்டன. சந்தை நிபுணர்களின் கூற்றின்படி சொன்னால், சந்தையில் ரத்த ஆறு ஓடியது என்றே சொல்ல வேண்டும்.

மத்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை குறித்த கூட்டம் தள்ளிப் போனதாலும் வர்த்தகர்கள் லாபத்தை வெளியே எடுக்க முயன்றதாகவும் இந்த சரிவு என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,023 புள்ளிகளும், தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிப்டி 303 புள்ளிகளும் குறைந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன.

இன்றைய வர்த்தகத்தில் அரசுத் துறை பங்குகளை சார்ந்த சில நிறுவனங்கள் லாபத்தை கொடுத்தன. ஓஎன்ஜிசி, என்டிபிசி, பவர் கிரிட் கார்ப்பரேஷன், ஸ்ரீ சிமெண்ட், டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சற்றே உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன.

இதையும் படிங்க: ரிசர்வ் வங்கி கூட்டம் ஒத்திவைப்பு!

Last Updated : Feb 7, 2022, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.