இந்தியப் பங்குச்சந்தையின் போக்கானது சில மாதங்களாகவே வீழ்ச்சியை நோக்கியே செல்கிறது. குறிப்பாக பட்ஜெட் தாக்கலுக்குப்பின் பங்குச்சந்தையின் வர்த்தகமானது தொடர் சரிவுகளைச் சந்தித்து வருகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்திலும் வீழ்ச்சியையே சந்தித்து வந்த பங்குச்சந்தை வாரத்தின் இறுதியில் உயர்வைக் கண்டுள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 337 புள்ளிகள் உயர்ந்து 36 ஆயிரத்து 981 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடு எண் நிஃப்டி 98 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 946 புள்ளிகளாக நிறைவடைந்தது.
அமெரிக்கா - சீனாவுக்கு இடையேயான வர்த்தகப் போரில் சமரசம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இன்று தகவல் வெளியானது. அதையெடுத்து பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்பட்டதாகச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.