பங்குச்சந்தையில் நாளுக்கு நாள் மாற்றங்களைச் சந்தித்து வரும் பங்குகளின் மத்தியில் இந்தியாமார்ட் இன்டர்மெஷ் லிமிடெட் (IndiaMart InterMesh Limited) பங்குகள் இதுவரை பெருமளவில் ஏற்றம்-இறக்கம் சந்தித்தது இல்லை. இந்நிலையில் கடந்த வாரம் ஒரு பங்கின் விலை ஆயிரத்து 897 ரூபாய்க்கு உயர்ந்தது. இன்றைய தேதியில் மட்டும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸில் ஆயிரத்து 970 ரூபாய் உயர்ந்து காணப்பட்டது.
பங்குச்சந்தையில் இரு மடங்கு உயர்ந்த இந்தியாமார்ட் பங்குகளை வாங்க அதிக முதலீட்டாளர்கள் விரும்புவதால் இந்தியாமார்ட் இன்டர்மெஷ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் மேலும் உயர்வை காணும் என பங்குச்சந்தை இடைத்தரகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஒரே நாளில் உயர்ந்த எண்ணெய் பங்குகள்!