ஐபிஎம் (IBM) என்றழைக்கப்படும் "இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன்" (International Business Machines Corporation) நியூயார்க் நகரை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் முன்னணி ஐ.டி. நிறுவனமான ஐபிஎம் அதன் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா, ”கரோனா பாதிப்பில் நிறுவனத்தின் வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முடிந்த வரை ஊழியர்களுக்கு உதவி புரிந்து வருகிறோம் . இந்த இழப்பை சரிசெய்ய அக்டோபர் மாதம் வரை சில ஊழியர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே வழங்க முடியும்.
அமெரிக்காவில் உள்ள ஊழியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு முடிந்த வரை மருத்துவ உதவி செய்து வருகிறோம். மேலும் தொழிலில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரிசர்வ் வங்கி வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்