இன்று வெளியாகிய தகவலின்படி ஹெச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட் அதன் சந்தை மூலதனத்தை 100 பில்லியன் டாலருக்கும் மேல் உயர்த்தி சாதனைப் படைத்துள்ளது. இந்தியாவில் இந்த மைல் கல்லை எட்டிய மூன்றாவது நிறுவனம் ஹெச்.டி.எஃப்.சி ஆகும்.
இந்த 100 பில்லியன் சந்தை மூலதனத்தை முதலில் எட்டியது கடன் வழங்கும் நிறுவனங்களில் பெயர் பெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆகும். இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் 140.74 பில்லியன் டாலர். மேலும் இரண்டாவது இடத்தில் 114.60 பில்லியன் டாலர் சந்தை மதிப்போடு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் திகழ்கிறது.
தற்போது ஹெச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட் சந்தை மூலதனத்தை 100 பில்லியன் டாலருக்கும் மேல் உயர்த்தியதால், அது உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் 110ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதையும் படிங்க: இன்றைய பங்குச்சந்தையில் எந்தப் பங்குகள் வாங்கலாம்?