ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 27 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நேற்று 27 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த தங்கத்தின் விலை இன்று ஒரேநாளில் 352 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்க விலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டிவருவதால் நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஆடி மாதம் முடிய இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக தயாராகிவரும் மக்கள் தங்கத்தின் விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.