மத்திய அரசு அண்மையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தங்கத்தின் மீதான வரியை அதிகரித்தது. இதனால், தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. சவரனுக்கு கிட்டத்தட்ட 30 ஆயிரம் ரூபாய்வரை சென்றது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ரூ.48 சரிவடைந்து 28 ஆயிரத்து 896-க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ரூபாய் குறைந்து மூவாயிரத்து 612 ஆக விற்பனை செய்யப்பட்டுவருகிறது.