மும்பை: சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலைகள் புதிய உச்சத்திற்கு உயர்ந்ததால், உள்நாட்டு பொருள் வணிக சந்தையிலும் தங்கத்தின் ஒப்பந்ததிற்கான எதிர்கால் விலை உயர்வைச் சந்தித்துவருகிறது.
பொருள் வணிக சந்தையில் (எம்.சி.எக்ஸ்) தங்கத்திற்கான அக்டோபர் ஒப்பந்தம் 10 கிராமுக்கு 53,670 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. அதே வேளையில் ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த ஒப்பந்தம் 10 கிராமுக்கு 54,199 ரூபாயில் வர்த்தகமானது.
'கோவிட் கறி... மாஸ்க் நாண்...' ஒரு பிடி பிடிக்கும் சாப்பாட்டுப் பிரியர்கள்!
தங்கத்தின் அக்டோபர் ஒப்பந்தம் தற்போது ரூ.53,637 ஆக வர்த்தகமாகிறது. இது தற்போதைய ஆகஸ்ட் மாத ஒப்பந்தத்திலிருந்து ரூ .198 அல்லது 0.36 விழுக்காடு அளவு உயர்வைச் சந்தித்து வர்த்தகமாகிறது.
சர்வதேசச் சந்தையில் தங்கம் 28 கிராம் அளவான அவுன்ஸ் ஒன்றுக்கு 1,987.95 டாலராக உயர்ந்திருந்தது. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, தற்போதைய தொற்றுநோய் பரவல் தொடர்வதால் தங்கத்திற்கான விலையில் நிச்சயமற்ற தன்மை நிலவி வருவதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
காதல் மனைவியை துடிதுடிக்க வெட்டி கொலை: கணவன் வெறிச்செயல்!
மேலும், தங்கத்திற்கான தேவை குறைந்தபோதும், தங்கம் இறக்குமதி என்பதும் கரோனா காலத்தில் வெகுவாக சரிந்துள்ளது. இதுவும் தங்க விலையேற்றத்துக்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.