மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ், நேற்று (அக்.14) வர்த்தகமானதைவிட சுமார் 16 புள்ளிகள் குறைந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. அதன் பின்னர் பங்குச்சந்தை சரிவின் பாதையிலேயே பயணித்தது.
சென்செக்ஸ் இன்றைய வர்த்தக நாள் இறுதியில் 1,066 புள்ளிகள் சரிவடைந்து, 39,728 புள்ளிகளிலும், தேசியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 290 புள்ளிகள் குறைந்து, 11,680 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் நான்கு விழுக்காடு வரை சரிவடைந்தது. அதைத் தொடர்ந்து டெக் மஹிந்திரா, சிந்து வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
மறுபுறம் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டு வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க மேலும் ஒரு ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்பட வாய்ப்பில்லை என்று முதலீட்டாளர்கள் மத்தியில் தகவல் பரவுவதாலும், உலகளாவிய பங்குச் சந்தைகள் பலவீனமாக இருப்பதாலும் இந்தியப் பங்குச்சந்தை சரிவடைந்துள்ளதாக துறை சார்ந்த வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: பிக் பில்லியன் டே விற்பனை: பிளிப்கார்ட்டின் அதிரடி சலுகைகள்!