ETV Bharat / business

செப்டம்பரில் வெளிநாட்டு முதலீடு ரூ.7¸714 கோடியாக அதிகரிப்பு!

செப்டம்பர் மாதத்தில் வெளிநாட்டு முதலீடு ரூ.7 ஆயிரத்து 714 கோடியாக அதிகரித்துள்ளது. நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவி வரும் நிலையில், வெளிநாட்டு முதலீடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.

author img

By

Published : Sep 29, 2019, 3:13 PM IST

FDI in September

கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் நிலவி வருகிறது. மேலும் உலக பொருளாதாரமும் திடீர் சுணக்கத்தை கண்டுள்ளது. இது இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது. பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் முதல் கார் தயாரிப்பு நிறுவனம் வரை சிக்கலை எதிர்கொண்டது.

சில நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களின் வேலை நேரத்தை குறைத்தனர். இதனால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு பொருளாதார சீர்திருத்தத்தை அறிவித்தது. தொடர்ந்து கார்ப்பரேட் வரி 10 சதவீதம் வரை குறைக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை தற்போது பலனளிக்க தொடங்கியுள்ளது. அந்நிய முதலீடு ரூ.7 ஆயிரத்து 714 கோடிகள் வரை அதிகரித்துள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பொருளாதார மந்தநிலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.

கடந்த இரு மாதங்களில் மட்டும் அந்நிய முதலீடு ரூ.8 ஆயிரம் கோடி வரை வெளியேறியது. அந்த வகையில்¸ ஆகஸ்ட் மாதத்தில் 5 ஆயிரத்துக்கு 920 கோடி ரூபாயும்¸ ஜுலை மாதத்தில் 2 ஆயிரத்து 985 கோடி ரூபாயும் அடங்கும். இதனால் பொருளாதார வளர்ச்சி மேலும் சரிவை சந்தித்தது. இந்த நிலையில்தான் பொருளதார சீர்திருத்தம் அறிவிக்கப்பட்டு¸ வரி குறைப்பை அரசு கையில் எடுத்தது.

இதுகுறித்து பொருளாதார வல்லுநர் வி.கே.விஜயகுமார் கூறும்போது¸ “உள்நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் அரசும்¸ பங்கு சந்தை கட்டுப்பாட்டு வாரியமும் (செபி) சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த முதல் கட்ட பணிகள் முதலீட்டாளர்களுக்கு சற்று ஆறுதலை தருகிறது. கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருகின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம்” என்றார்.

அமெரிக்கா - சீனா இடையே நிலவி வந்த வர்த்தக போர் சற்று தணிந்துள்ளதும் பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என்று சர்வதேச வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே:

லட்சுமி விலாஸ் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை

Intro:Body:

46.Foreign investors pour in ₹7,714 crore into capital markets in September

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.