2020-2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்செய்தார். இதில் நாட்டின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த மத்திய அரசு முன்னெடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளின் முக்கிய அம்சங்கள்:
- நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட என்.ஐ.பி. திட்டத்திற்கு 103 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து முதலீடுகளை ஈர்க்கும்விதமாக நாடு முழுவதும் ஆறாயிரம் புதிய திட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- தொழில்துறை மேம்பாட்டுக்காக 27 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- உதான் திட்டத்தின் மூலம் வரும் 2024ஆம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.
- உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்தும்விதமாக புதிய நீர்வழித்தடங்கள் கண்டறியப்படும்.
- இயற்கை எரிவாயு குழாய் திட்டத்திற்கான வழித்தடம் 16 ஆயிரம் கிலோ மீட்டரிலிருந்து 27 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரிக்கப்படும்.
- மாற்றுசக்தி மின்சாரத் திட்டத்திற்காக 22 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு கூடுதல் கவனம் அளிக்கப்படும்.
இதையும் படிங்க: 2020 பட்ஜெட்: ஆயுஷ்மான் திட்டத்தின்கீழ் 20,000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள்