கரோனா பெருந்தொற்று காரணமாக வங்கிகளில் கடன் பெற்றவர்களிடம் மூன்று மாதங்களுக்கு (மார்ச் 1ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை) மாதத் தவணை கட்டணம் (இ.எம்.ஐ.) வசூலிக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு நடுத்தர வர்க்கத்தினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ள சூழலில், இதனைப் பெருநிறுவனங்களும் பயன்படுத்திக்கொண்டால் நாட்டின் பணப்புழக்கம் ரூ. 2.10 லட்சம் கோடி அளவிற்கு அதிகரிக்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
'கிறிசில் ரேட்டிங்ஸ்' என்ற மதிப்பீட்டு நிறுவனம், நிதித் துறை அல்லாத 100 துறைகளைச் சேர்ந்த ஒன்பது ஆயிரத்து 300 நிறுவனங்களை மதிப்பீடு செய்து அந்த ஆய்வினை வெளியிட்டுள்ளது.
மின்சாரம், தொலைத்தொடர்பு, சாலை, ஆடை, உரம் ஆகிய துறைகள் அதிகப் பலன் பெறும் என்றும்; தகவல் தொழில்நுட்பம், வாகன உற்பத்தித் துறைகள் ஒப்பீட்டு அளவில் குறைந்த பலனே பெறும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 'பெட்ரோல், டீசல் விலையை இப்பவாவது குறைங்க' - போக்குவரத்து சங்கம் கோரிக்கை