ETV Bharat / business

4 ஆயிரத்தை தொட்ட 1 கிராம் தங்கம்!

சென்னை: ஆபரணத் தங்கம் 1 கிராம் 4,012 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ. 4000 தொட்ட தங்கம் விலை
ரூ. 4000 தொட்ட தங்கம் விலை
author img

By

Published : Feb 21, 2020, 2:45 PM IST

உலக பொருளாதார மந்த நிலை காரணமாக முதலீட்டாளர்கள் தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கம், 1 கிராம் 3,978 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று 34 ரூபாய் அதிகரித்து 4,012 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 32,096 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு 52.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தற்போது தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்து வந்தாலும், இந்த ஆண்டு இறுதியில் உலக பொருளாதாரம் முன்னேற்றம் காணும்போது அவற்றின் விலை பெரியளவில் சரிய வாய்ப்புள்ளதாகவும் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.