இந்திய பெருநிறுவன ஜாம்பவானும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி தற்போது மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார்.
சர்வதேச நிறுவனமான ஹுருன் 2020ஆம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், 67 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.
மேலும், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ள அம்பானி, இப்பட்டியலில் டாப் 10இல் உள்ள ஒரே ஆசியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அம்பானியின் சொத்து மதிப்பு, கடந்தாண்டைக் காட்டிலும் 24 விழுக்காடு கூடுதலாக உயர்ந்துள்ளது. அம்பானி தற்போது தொலைத்தொடர்புத் துறையில் சிறப்பான வருவாய் ஈட்டிவருவதாக ஹுருன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த 18 மாதத்திற்குள் தனது நிறுவனங்களின் கடனை முற்றிலுமாக நீக்க வேண்டும் என முடிவெடுத்துள்ள முகேஷ் அம்பானி, தனது 20 விழுக்காடு எண்ணெய் வர்த்தகத்தை சௌதி ஆர்ம்கோ நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்.
இதையும் படிங்க: விவசாயிகளின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய கொரோனா