கரோனா வைரஸ் பாதிப்பால் உலகின் பெரும்பாலான நாடுகளின் இயல்புநிலை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதன் விளைவாக உலகில் பொருளாதார சரிவு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடீஸ், கரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் கடுமையான சரிவைச் சந்திக்கும் என எச்சரித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5.3 விழுக்காடிலிருந்து 2.5 விழுக்காடாக குறையும் என மூடீஸ் கணித்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவின் வங்கித் துறை சிக்கல், சந்தை பணப்புழக்கம் கடும் சரிவை சந்தித்துவரும் நிலையில் தற்போது, கரோனா வைரஸின் தாக்கமும் இந்திய சந்தையை வெகுவாக பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி பொருளாதார பெரும் சக்திகளான சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உள்ளிட்ட ஜி - 20 நாடுகள் கரோனா வைரஸால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
இதை எதிர்கொள்ளும் விதமாக இந்த நாடுகள் நேற்று அவசர ஆலோசனை மேற்கொண்டு 5 லட்சம் கோடி டாலர் அவசர நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்தியாவும் தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக லாக் டவுனில் உள்ளதால் நலிவடைந்த பொருளாதார நிலையை சீரமைக்க 1.7 லட்சம் கோடி ரூபாய் அவசர நிதியை ஒதுக்கியுள்ளது. ரிசர்வ் வங்கியும் வட்டிக்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்கள்தான் முக்கியம்; பொருளாதாரம் அப்புறம்தான் - ட்ரம்புக்கு ரிசர்வ் வங்கி தலைவர் பதில்