பொருளாதார நிபுனரும், முன்னாள் திட்டக்குழுத் தலைவருமான மான்டெக் சிங் அலுவாலியா எழுதிய ’பேக் ஸ்டேஜ்’ (Backstage) புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், ”நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்து கடுமையான மந்தநிலையில் உள்ளது. இதனை மத்திய அரசு உணர வேண்டும். இந்த உண்மையை ஒத்துக்கொள்ள மோடி அரசு மறுக்கிறது. முதலில் சிக்கலை உணர்ந்து ஒத்துக்கொண்டால்தான் அதற்கான தீர்வைக் கண்டுபிடிக்க முடியும்.
நாட்டிலுள்ள விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்கான வழிகள், 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரத்தை ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதற்கான வழிகள் மான்டெக் சிங் அலுவாலியாவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.
இந்த விழாவில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் வை.வி. ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: உத்வேகம் அளிக்கும் பார்வை மாற்றுத்திறனாளி