ETV Bharat / business

ஊரடங்கு பரிதாபங்கள்: வணிகம், அரசு, நிதி கொடையாளர்கள் முடக்கம் - சுபாஷ் சந்திரா

ஊரடங்கு உத்தரவினால் வணிக வர்த்தகங்கள், அரசு சார்ந்த தொழில்கள், நிதி கொடையாளர்கள் என அனைத்து தரப்பும் முடங்கியுள்ளதாக நிதித்துறை முன்னாள் செயலாளர் சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளர்.

முன்னாள் நிதித் துறைச் செயலாளர் சுபாஷ் சந்திரா கார்க்

author img

By

Published : Apr 23, 2020, 12:44 PM IST

டெல்லி: ஊரடங்கினால் இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்து வருவதாகவும், தற்போது நிலவும் நிதி பற்றாக்குறையை கையாள சில யுக்திகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் நிதித் துறைச் செயலாளர் சுபாஷ் சந்திரா கார்க் தனது ப்ளாக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அது தொடர்பான பதிவில், "பண வழங்கல் செயல்பாடுகளின் ஈடுபடும் தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் அதல பாதாளத்தில் இருக்கிறது. போக்குவரத்து, பொழுதுபோக்கு, விளையாட்டு போன்ற எந்த துறைகளிலும் பணப்புழக்கங்கள் இல்லை.

லாக் டவுனால் 4 கோடி தொழிலாளர்கள் பாதிப்பு - உலக வங்கி

15 விழுக்காடு அளவுக்கு, அதாவது ரூ.15 லட்சம் கோடி அளவில் இந்த துறைகள் மூலம் பண பலன் முடங்கிக் கிடக்கிறது. இந்த வணிக முடக்கத்தினால் நாடு பெருமளவு நிதிப் பற்றாக்குறையை சந்திக்க இருக்கிறது.

மொத்தமாக இந்தச் சூழலினால், அரசு சார்ந்த நிறுவனங்களினாலும், அரசு சாராத நிறுவனங்களினாலும் 300 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை தேக்கமடைந்துள்ளது.

காப்பீட்டு நிறுவனங்கள் ப்ரீமியங்களை தவணைகளில் பெற்றுக்கொள்ளலாம்

மத்திய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து சுமார் 140 லட்சம் கோடி ரூபாய் கடன்பட்டுள்ளன. அனைத்து வகையான வணிகங்களின் நிலுவை சுமார் ரூ .100 லட்சம் கோடி. குடும்பங்கள் வைத்திருக்கும் கடன் மதிப்பீடு சுமார் ரூ. 50 லட்சம் கோடி.

இதனால், கரோனா நோய்த் தொற்று காலக்கட்டத்தில் இருந்து மீண்டு வர அரசுக்கு மேலும் அதிக கடன் தொகை பெறவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது" என்று சுபாஷ் சந்திரா கார்க் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.