ETV Bharat / business

கோவிட் - 19: 40 வங்கி ஊழியர்கள் உயிரிழப்பு; பணிச் சுமையைக் குறைக்க கோரிக்கை

டெல்லி: கரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்களின் சுமையைக் குறைத்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென மத்திய நிதியமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Jul 6, 2020, 1:37 PM IST

Bank
Bank

கரோனா பெருந்தொற்று பாதிப்பின் காரணமாக பல்வேறு அரசுத் துறைகள் தற்போது 33-50 விழுக்காடு ஊழியர்களைக் கொண்டே இயங்கிவருகின்றன. அதேவேளையில் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் துறைகளுக்குப் பணிச்சுமை அதிகரித்துவருவதாக குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

நாடு முழுவதும் சுமார் 40 வங்கி ஊழியர்கள் கரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், வங்கி ஊழியர்களின் நலன், பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென வங்கி ஊழியர்கள் நலக் கூட்டமைப்பின் செயலாளர் அஸ்வானி ராணா மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், நாடு முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினரைக் கரோனா போராளிகளாகப் பார்ப்பதுபோல, வங்கி ஊழியர்களையும் கரோனா போராளிகளாக மதிக்க வேண்டும். இதுவரை 40க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு உரிய நிதியுதவி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும். மேலும் அனைத்து வங்கி ஊழியர்களுக்கு. 50 லட்சம் ரூபாய் சுகாதாரக் காப்பீடு வழங்கி அவர்களது நலனை உறுதிசெய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், விதிமுறைகளை மீறி கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், வைரஸ் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் உள்ளவர்களை சில வங்கிக் கிளைகள் வலியுறுத்தி வேலைசெய்ய வைப்பதாகவும் அஸ்வானி ராணா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வருமானவரிக் கணக்கு தாக்கல்: காலக்கெடு மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.