டெல்லி: அட்சய திருதியையை முன்னிட்டு தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் டிஜிட்டல் முறையைக் கையாள அரசு அறிவுரை தந்துள்ளது.
இது கோவிட்-19 காலம் என்பதால், ஊரடங்கு காரணமாக மக்கள் தங்கம் வாங்க கடைகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனை போக்க அனைவரும் டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும். இது மிகவும் பாதுகாப்பானது. இதனை திருடவும் வழியில்லை.
2 ஆயிரம் கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் சுந்தர் பிச்சை!
பேடிஎம், அமேசான்பே, கூகுள்பே உள்ளிட்ட செயலிகள் வாயிலாக, டிஜிட்டல் தங்கம் வாங்கலாம். மேலும், அரசின் தங்க நகைக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இவை அனைத்தையும் வீட்டிலிருந்தே செய்துவிட முடியும்.
தற்போதைய நிலவரப்படி, இந்தியா புல்லியன் அண்ட் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் லிமிடெட் விலையின் படி, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) வர்த்தகத்தில், 99.9 சுத்த தங்கம் 10 கிராம், 46 ஆயிரத்து 607 ரூபாய் (ஜிஎஸ்டி இல்லாமல்) விலையில் வர்த்தகமானது.
ஜூம் செயலியை ஓரம்கட்டும் சமூகவலைதள அரசன்!
பொருள் வணிகச் சந்தையில், ஜூன் மாத ஒப்பந்த விலையானது, ரூ.163 ஏற்றம் கண்டு, 10 கிராம் 46 ஆயிரத்து 590 ரூபாயாக வர்த்தகமானது. ஏப்ரல் 16 அன்று, விலைமதிப்பற்ற உலோகங்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு 47ஆயிரத்து 327 ரூபாயை எட்டி வர்த்தகமானது.