இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி கடந்த காலங்களை விட கணிசமாகக் குறைவாக இருக்கும் என மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை நிறுவனம் முன்னறிவித்துள்ளது.
இதுகுறித்து மூடிஸ் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட நவம்பர் மாதக் கணிப்பில், “இந்தியாவின் கடன் சுயவிவரம் அதன் பெரிய மற்றும் மாறுபட்ட பொருளாதாரம், நிலையான உள்நாட்டு நிதி தளங்களால் ஆதரிக்கப்படுகிறது.
உயர் அரசாங்கக் கடன், பலவீனமான சமூக மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் பலவீனமான நிதித் துறை ஆகிவற்றுக்கு எதிராக சமப்படுத்தப்படுகிறது. இது கரோனா வைரஸ் தொற்று நடவடிக்கைளுக்கு மத்தியில் இது மேலும் அழுத்தத்தை கொடுக்கிறது.
பொருளாதாரம் குறித்த எதிர்மறை பார்வையால் கடந்த காலங்களைவிட பொருளாதார வளர்ச்சி மோசமாகக் குறையும் அபாயத்தில் இருக்கிறது. இதற்கிடையில், கரோனா வைரஸ் பரவலானது ஏற்கனவே இருந்த பொருளாதார மந்த நிலையை மேலும் அதிகரிக்கும். இது நீடித்த நிதி ஒருங்கிணைப்புக்கான வாய்ப்புகளை கணிசமாகக் குறைத்துள்ளது.
பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கான அரசின் நடவடிக்கைகள் வளர்ச்சி மந்தநிலையின் ஆழத்தையும் அதன் கால அளவையும் குறைக்க உதவ வேண்டும். இருப்பினும், கிராமப்புற குடும்பங்களிடையே நீடிக்கும் நிதி நெருக்கடி, பலவீனமான வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடையே (என்.பி.எஃப்.சி) கடன் நெருக்கடி ஆகியவை பொருளாதார மந்தநிலையை மேலும் பலவீனமடைய செய்வதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளன.
வணிக முதலீடு மற்றும் உயர் மட்டங்களில் வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், குறுகிய வரி தளத்தை கணிசமாக விரிவுபடுத்துவதற்குமான சீர்திருத்தங்கள் செய்யும் வாய்ப்பை குறைத்துவிட்டன. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி அதிக அளவில் மீளவில்லை என்றால், பொது அரசாங்க வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைப்பதிலும் கடன் சுமை அதிகரிப்பதைத் தடுப்பதிலும் அரசாங்கம் மிகக் கடுமையான தடைகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.
மூடிஸ் கடந்த மாதம், 2020 காலண்டர் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை மார்ச் மாதத்தில் திட்டமிடப்பட்ட 2.5 சதவீதத்திலிருந்து 0.2 சதவீதமாக குறைத்தது.
நாடு முழுக்க ஊரடங்கு அமலில் இருந்தால் சுகாதார நெருக்கடி குறையும், அதேநேரம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கூர்மையான சரிவை ஏற்படுத்தும்” என தெரிவித்துள்ளது.
கரோனா நெருக்கடி காரணமாக, மார்ச் 26ஆம் தேதியன்று, மத்திய அரசு சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளை குறிவைத்து ரூ.1.7 லட்சம் கோடி (22.3 பில்லியன் அமெரிக்க டாலர், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.8 சதவீதம்) நிவாரணப் திட்டங்களை அறிவித்தது.
இதையும் படிங்க: அமெரிக்காவில், தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை!